Tuesday, January 8, 2008

1.சாதி மதம் ஒழிக்கப்படுமா?

இன்றைய சமுதாய முன்னேற்றத்தின் முதல் எதிரி மதம் , சாதி இவையிரண்டும்தான்.
அரசியல்வாதிகள் தங்கள் நலன் மட்டுமே கருதி,மதங்களின் , சாதிகளின் அடிப்படையில்
இலவசங்களையும் , வாய்ப்புகளையும் ஏற்படுத்தி மக்களை மென்மேலும் பிற்படுத்துகின்றனர்.
அரசியல்வாதிகளின் இத்தகைய செயல்களால் மதமும் , சாதியும் நன்கு வேறூன்றி பல் வேறு
சாதிகளை உருவாக்குகின்றன.மக்கள் இந்த ஆபத்தான நிலையை விரைவாக உணர்ந்து செயல்படவேண்டும்,அல்லது வருங்கால சந்ததியினர் எதிர்காலம் எட்டாக்கனி ஆகிவிடும்.
அ) பள்ளியில் குழந்தைகளை சேர்க்கும் போது, அனுமதிப் படிவத்தில்
குழந்தையின் பெயர்:
குழந்தையின் தாய் பெயர்:
குழந்தையின் தந்தை பெயர்:
குழ்ந்தையின் குடிஉரிமை: இந்தியன்
இவைகளைத்தவிற வேறெதுவும் எழுதக்கூடாது.
ஆ) அரசாங்க அலுவலகங்களான - கிராம அலுவலர் - சாதி , மத சான்றிதழ்கள் வழங்குவது
சட்டவிரோதமாக்கப்படவேண்டும்.
தந்தை பெரியாரின் பாசறையில் இருந்து புறப்பட்ட டாக்டர்.கலைஞர் இந்த எளியவர்களின்
குமுறல்களுக்கு செவிசாய்ப்பாரா?..நன்றி..லோகா.

No comments: